கலிபோர்னியா கடற்பகுதியில் கடும் நிலநடுக்கம்

Subscribe to Oneindia Tamil

பின்ஸ்னோ (கலிபோர்னியா): வடக்கு கலிபோர்னியா கடல் பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல பகுதிகளில் கட்டடங்கள் ஆட்டம் கண்டதால் மக்கள் பீதியில் ஓடினர்.

வடக்குக் கலிபோர்னியாவின் கடற்கரைக்கு அப்பால் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு (அங்கு மாலை 4.27 மணி) நிலநடுக்கம் ஏற்பட்டது. பெர்னாண்டேல் என்ற இடத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதன் காரணமாக தெற்கு ஓரிகான் எல்லைப் பகுதியிலும், பல்வேறு கடலோரப் பகுதிகளிலும் உள்ள கட்டடங்கள் அதிர்ந்துள்ளன. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.

இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் இல்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கம் காரணமாக ஹம்போல்ட் கவுண்டி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் 25,000 மக்கள் பாதிக்கப்பட்டனர்.

மேலும், பல பகுதகிளில் மின்சார விளக்குக் கம்பங்கள் கீழே விழுந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதேபோல, குடிநீர், காஸ், கழிவு நீர்க் குழாய்களிலும் விரிசல் ஏற்பட்டு கசிவு ஏற்பட்டது.

சில இடங்களில் வீடுகளில் லேசான விரிசல் காணப்பட்டதாகவும், பொருட்கள் கீழே விழுந்ததாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+