யாழ்ப்பாணத்தில் கொழும்பு பங்குச்சந்தை கிளை- அடுத்த மாதம் திறப்பு?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் போருக்கு பின்னர் வடகிழக்கு பகுதியில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக யாழ்ப்பாணத்தில் கொழும்பு பங்குச்சந்தை கிளை அலுவலகம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் விவசாய வளம் மிகுதியாக இருப்பதால் அதைச் சார்ந்த உயிரி வேதியல், உரம் உள்ளிட்ட தொழில் துறைக்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக இலங்கை அரசு கணித்துள்ளது.

இதன் அடிப்படையில் வெளிநாட்டு நிறுவனங்களை, குறிப்பாக இந்திய முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்க இலங்கை திட்டமிட்டுள்ளது.

இம்முயற்சியின் ஒரு அங்கமாக தற்போது யாழ்ப்பாணத்தில் கொழும்பு பங்குச் சந்தையின் கிளையை அமைக்கும் பணிகளை இலங்கை அரசு முடுக்கிவிட்டுள்ளது.

அலுவலகத்துக்கான கட்டிடத்தை தேர்ந்தெடுக்கும் பணியில் பங்குச் சந்தை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இம்மாத இறுதிக்குள் கிளை அலுவலகத்துக்கான கட்டிடம் தயாராகி விடும் என தெரிகிறது.

பிப்ரவரி மாத துவக்கத்தில் கிளை அலுவலகத்தை திறந்து விடுவோம் என கொழும்பு பங்குச்சந்தை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+