அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை - தானே பிரசவம் பார்த்த பெண்
மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் பிரசவம் பார்க்க டாக்டர்கள் இல்லாததால் தனக்கு தானே பிரசவம் பார்த்துக் கொண்டார் ஒரு பெண்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயன், இவரது மனைவி கலா. இவர்கள், மதுரையில் கட்டிட தொழிலாளர்களாக பணி செய்து வருகின்றனர்.
இவர்களுககு ஏற்கனவே ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கலா மீண்டும் கர்ப்பமானார். இதனையடுத்து பிரச்சவத்திற்காக மதுரை மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட கலாவுக்கு வலி வந்ததை அடுத்து, அவரை மருத்துவ மனையில் உள்ள ஆபரேசன் தியேட்டருக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், அங்கு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் யாரும் இல்லை. இந்த நேரத்தில் கலாவுக்கு பிரசவ வலி அதிகரித்து குழந்தை வெளியே வர ஆரம்பித்தது. அப்போது கலா அலறி துடித்தார். யாரும் உதவிக்கு இல்லாததால், குழந்தையை சிரமப்பட்டு தானே வெளியில் எடுத்துள்ளார்.
அது ஒரு ஆண் குழந்தையாகும். அதிர்ஷ்டவசமாக பிரவசம் பிரச்சினையின்றி முடிவடைந்த நிலையில், 15 நிமிடங்கள் தாமதத்திற்கு பின்பு அங்கு பயிற்சி டாக்டர் ஒருவர் வந்து குழந்தையின் தொப்புள் கொடியை மட்டும் துண்டித்து விட்டு மருந்து கொடுத்தார்.
தானே பிரசவசம் பார்த்துக் கொண்ட வேதனையில் கலா இருந்த நிலையில், அங்கு வந்த நர்ஸ் ஒருவர் ஆண் குழந்தை பிறந்ததற்கு ரூ 1,500 கொடுத்தாக வேண்டும் என்று கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கலா கூறியதால், அவருக்கு படுக்கை கூட ஒதுக்காததால் அவர் பச்சிளம் குழந்தையுடன் மகப்பேறு பிரிவு வராண்டாவில் கடும் குளிரில் தங்க வைக்கப்பட்டார்.
டாக்டர்கள் இல்லாதது முதல் குற்றம், தானே பிரசவம் பார்த்துக் கொண்ட பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டி, உரிய படுக்கை வசதியைச் செய்து தராதது இரண்டாவது குற்றம். இப்படிப்பட்ட ஈவு இரக்கமற்ற, மனிதாபிமானமாற்ற முறையில் நடந்து கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்திற்கும், தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் மதுரை மாவட்ட சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications