குற்றாலம் அருவியை ரசித்த தமிழக கவர்னர்

பர்னாலா நேற்று நெல்லை வந்தார். மாலையில் அவர் நெல்லையில் இருந்து கார் மூலம் குற்றாலம் வந்தார். குற்றாலம் மெயின் அருவி பகுதிக்கு சென்ற கவர்னர் அருவியின் இயற்கை அழகை பார்த்து ரசித்தார்.
கவர்னர் வருகையை முன்னிட்டு குற்றாலம் அருவி பகுதி சுத்தம் செய்யப்பட்டிருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அருவியில் ஐயப்ப பக்தர்கள் வழக்கம் போல் குளித்தனர்.
சிறிது நேரம் கழித்து மெயின் அருவி பகுதியில் இருந்து கவர்னர் புறப்பட்டார். அவர் ஐந்தருவிக்கு செல்வார் என கூறப்பட்டது. ஆனால் அங்கு அவர் செல்லவில்லை.
தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு கவர்னர் வருவார் என கூறப்பட்டது. இதனை முன்னிட்டு காசி விஸ்வநாதர் கோயில் முன்பு வாகனங்களை நிறுத்த போலீசார் அனுமதிக்கவில்லை. ரத வீதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.
கோயில் வாயில் பகுதிகளில் டிஎஸ்பி சீனிவாசன், தாசில்தார் பரமசிவன், கோயில் நிர்வாக அதிகாரி ராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் மாலை மரியாதையுடன் வரவேற்க தயாராக இருந்தனர். குற்றாலத்தில் இருந்து புறப்பட்ட கவர்னர் தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு வராமல் நேராக நெல்லை சென்று விட்டார். இதனால் கவர்னரை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.












Click it and Unblock the Notifications