திருடர்களைப் பிடிக்க முயன்று கத்திக் குத்துப் பட்டு இந்தியர் பலி

கிழக்கு லண்டனில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பார்க்கிங் ரயில் நிலையப் பகுதியில், இரண்டு திருடர்கள், ஒரு பெண் வைத்திருந்த கைப்பையைப் பறித்துக் கொண்டு ஓடினர்.
அப்போது அந்த இடத்தில் இருந்த சீக்கிய இளைஞர் சுக்வீந்தர் சிங், திருடர்களைப் பிடிக்க முயன்றார். திருடர்களைப் பிடித்து பையைப் பிடுங்க முயன்றுள்ளார். அப்போது திருடர்கள் இருவரும், சிங்கை தங்களிடம் இருந்த கத்தியால் கடுமையாக குத்தினர். இதில் படுகாயமடைந்து கீழே விழுந்தார் சிங்.
உடனடியாக அவரை ராயல் லண்டன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
கொல்லப்பட்ட சிங்குக்கு வயது 31 ஆகும். திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இங்கிலாந்தில் கடந்த 10 வருடங்களாக வசித்து வந்தார். கட்டுமானத் தொழிலை அவர் மேற்கொண்டு வந்தார்.
ஒரு குற்றத்தைத் தடுக்கப் போன சுக்வீந்தர் சிங் அதில் தோல்வி அடைந்து உயிரை இழந்துள்ளது மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கிறது. திருடர்களைப் பிடிக்க அவர் மேற்கொண்ட முயற்சி மிகவும் துணிகரமானது. ஆனால் அவர் இதில் உயிரை இழந்துள்ளது மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது என்று லண்டன் போலீஸ் அதிகாரி ஜான் சான்ட்லின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications