ஆஸி.யில் கொல்லப்பட்ட இந்தியரின் உடல் தகனம் செய்யப்பட்டது
Subscribe to Oneindia Tamil
ஜாக்ரான்(பஞ்சாப்): ஆஸ்திரேலியாவில் இனவெறியர்களால் குத்திக் கொல்லப்பட்ட இந்திய வாலிபர் நிதின் கார்கின் இறுதி சடங்கு பஞ்சாபில் உள்ள அவரின் சொந்த ஊரில் இன்று நடைபெற்றது.
ஆஸ்திரேலியாவில் இருந்து டெல்லிக்கு கொண்டுவரப்பட்ட நிதினின் உடல் இன்று காலை பஞ்சாபில் உள்ள ஜாக்ரான் நகருக்கு எடுத்து வரப்பட்டது. நிதினின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர் கதறி அழுதனர்.
நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்திய பின்னர் இறுதிசடங்கு மேற்கொள்ளப்பட்டது. நிதினுடைய தம்பி ஹரிஷ் சிதைக்கு தீமூட்டினார்.
இறுதி சடங்கில் ஆஸ்திரேலிய ஹைகமிஷன் செயலாளர் டிம் ஹீன்ஸும் கலந்துகொண்டு நிதின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 'நிதின் படுகொலைக்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்' என அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications