போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தை பலி
புதுக்கோட்டை: போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட 2 வயதுக் குழந்தை பலியானதால், புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் விஜய் (2). இன்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து பெருமாள் தனது மகன் விஜய்க்கு, காலை ஒன்பதரை மணியளவில் அங்குள்ள நகராட்சி பள்ளியில் போலியோ சொட்டு மருந்து கொடுத்துள்ளார்.
சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட சில மணி நேரத்தில், குழந்தை மயக்கமடைந்ததால் பதற்றமடைந்த பெருமாள், குழந்தையை புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை விஜய் உயிரிழந்தான். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணையில், விஜய்க்கு ஏற்கனவே வைரஸ் காய்ச்சல் இருந்ததாக தெரிய வந்தது. இதன் காரணமாக போலியோ சொட்டு மருந்து குழந்தையின் உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி விட்டு மரணத்தை ஏற்படுத்தி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications