சாமி பக்கம் திரும்புங்க - கற்பழிப்பு வழக்கில் சிக்கிய தாத்தாவுக்கு சுப்ரீம் கோர்ட் அட்வைஸ்
டெல்லி: கற்பழிப்பு வழக்கில் சிக்கி சிறை தண்டனையை அனுபவித்து வந்த 70 வயது தாத்தாவை, ஆன்மீகத்திலும், இறைவனிடத்திலும் மட்டும் கவனம் செலுத்துங்கள், இனிமேல் இதுபோன்ற தவறுகளில் ஈடுபடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுரை கூறி விடுதலை செய்துள்ளது.
அந்த தாத்தாவின் பெயர் கைகொண்டன். இவர் தனகு 64 வயதாக இருந்தபோது, 60 வயதுப் பெண்ணை கற்பழித்து விட்டார். மிகவும் மூர்க்கத்தனமாக அவர் நடந்து கொண்டதன் விளைவாக அந்தப் பாட்டியின் வலது கை உடைந்து போய் விட்டது.
கைது செய்யப்பட்ட தாத்தாவுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 6 வருடங்களாக சிறைத் தண்டனை வசித்து வந்தார் கைகொண்டன்.
இந்த நிலையில் தனக்கு வயதாகி விட்டதைக் காரணம் கூறி கருணை செய்து விடுவிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தாத்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை, நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அப்போது நீதிபதிகள், அவருடைய சிறைத் தண்டனையை 6 ஆண்டாகக் குறைத்து தாத்தாவை விடுதலை செய்யலாம் என உத்தரவிட்டனர்.
மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த தாத்தாவைப் பார்த்து, இதுபோன்ற தவறுகளை எதிர்காலத்தில் செய்யக் கூடாது. நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும். இந்த வயதில் பூஜை செய்வதிலும், சாமியைக் கும்பிடுவதிலும் மட்டுமே ஈடுபட வேண்டும். வாழ்க்கையின் மிச்சமுள்ள நாட்களை அமைதியான முறையில் கழிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினர் நீதிபதிகள்.
நீதிபதிகளின் அறிவுரையைக் கேட்டதும் அங்கு சிரிப்பலை எழுந்து அடங்கியது.












Click it and Unblock the Notifications