கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல் போட்டி- எம்எம்சி நடத்துகிறது
சென்னை: கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல் கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இப்போட்டியில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பங்கேற்கலாம்.
மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியின் 175வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்படும் இந்த போட்டியில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் எந்த பட்டம் பயிலும் மாணவர்களும் கலந்துகொள்ளலாம்.
வாழ்க்கை முறை மாற்றத்தின் விளைவாக ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் குறித்து கட்டுரைகள் எழுதப்பட வேண்டும். குறிப்பாக (கேஸ்ட்ரோ இன்டஸ்டைனல்) வயிறு மற்றும் குடல் தொடர்பான கோளாறுகளை சுட்டிக்காட்டுவதாக அமையவேண்டும்.
உதாரணத்துக்கு பாக்கெட் உணவுகள், சிகரெட், மது போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளை விவரிக்கலாம். பாதிப்புகளை கூறுவதோடு நிறுத்தாமல் தகுந்த தீர்வுக்கான கருத்துகளையும் முன்வைக்கவேண்டும்.
தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் ஏதேனும் ஒன்றில் எழுதலாம். ஆயிரத்து 500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும். ஜனவர் 15ம் தேதிக்குள் கட்டுரைகள், [email protected] என்ற முகவரிக்கு அனுப்பப்படவேண்டும்.
மூன்று கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, அதை எழுதியவருக்கு குடியரசு தினத்தன்று விருதும், சான்றிதழ்களும் வழங்கப்படும். இதுதொடர்பான விவரங்களை பெற, மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் பேராசிரியர் எஸ்.எம்.சந்திரமோகனை அணுகலாம். அல்லது +91 94449 01234 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.












Click it and Unblock the Notifications