எடியூரப்பாவை ஆபாசமாக திட்டிய தேவ கௌடா

கர்நாடக மாநிலத்தில் பெங்களூர்-மைசூர் உள்கட்டமைப்பு திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்தும் 'நைஸ்' நிறுவனம் விவசாய நிலங்களை கைப்பற்றி வருவதாக கெளடா குற்றம் சாட்டிவருகிறார். ஆனால், இந்தத் திட்டத்துக்கு அனுமதி தந்தவரே கெளடா தான்.
இந்தத் திட்டத்துக்காக இவரது குடும்ப நிலங்களையும் அந்த நிறுவனம் கைப்பற்றியதையடுத்து இதை விவசாயிகள் பிரச்சனை போல திசை திருப்ப கெளடா முயல்வதாக ஒரு குற்றச்சாட்டும் உள்ளது.
இன் நிலையில் நேற்று மைசூர் சாலையில் உள்ள நைஸ் நிறுவனம் முன் தேவகௌடா போராட்டம் நடத்தினார். அப்போது விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் நைஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக முதல்வர் எதியூரப்பா செயல்படுவதாக தேவ கௌடா குற்றம்சாட்டிப் பேசினார்.
'நந்தி நிறுவனத்தின் மேலாளர் அஷோக் கெனி மற்றும் சில அரசியல்வாதிகள் மாநிலத்தின் இயற்கை வளங்கள சுரண்டிக் கொண்டிருக்கின்றனர்' என்று பேசிக் கொண்டிருந்தார் தேவ கௌடா.
அப்போது உங்களின் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை என எதியூரப்பா கருத்து தெரிவித்திருக்கிறாரே என நிருபர்கள் கூறியபோது திடீரென உணர்ச்சிவசப்பட்ட தேவகௌடா எடியூரப்பாவை தாறுமாறாக திட்டத் தொடங்கினார்.
'பிளடி ba........d'' என்ற மகா கேவலமான கெட்ட வார்த்தைகளால் எதியூரப்பாவை அர்ச்சனை செய்த அவர், அவன்.. இவன் என்று போய், காசுக்காக செருப்பைக் கூட திண்ணும் நபர் தான் எதியூரப்பா என்று கண்ணாபின்னாவென திட்டினார்.
''ஹூ இஸ் தட் நான்சென்ஸ், அவருக்கு வெட்கம் இருக்கிறதா? தன்னை காப்பாற்றி கொள்ள பொம்பளை (ஷோபா, முன்னாள் பெண் அமைச்சர்) பின்னால் ஒளிந்து கொண்ட ஆள். பணத்துக்காகவும், பதவிக்காகவும் கையேந்திய மனிதன்.
எடியூரப்பாவை போல இழிவான செயல்களில் ஈடுபடுவதாக இருந்தால் என்னை எனது தந்தை பெற்றிருக்கவே மாட்டார். என்னைப் பற்றி கருத்து தெரிவிக்க இவர் யார்?'' என தி்ட்டித்தீர்த்தார் தேவ கௌடா.
இவையனைத்தும் லைவாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின.
இதற்கு பதில் அளித்துள்ள முதல்வர் எடியூரப்பா, 'இந்த திட்டமே தேவகவுடா மூளையில் உதித்த திட்டம் தான். அவருடைய விமர்சனத்தால் ஆழமான மனவேதனை அடைந்துள்ளேன்.
நம்பிக்கையற்ற வெறித்தனமான நிலையில் இருப்பதால் இதுபோன்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தி இருக்கிறார். அவர் தன் மனநிலையின் கட்டுப்பாட்டை முற்றிலுமாக இழந்து விட்டதாக தெரிகிறது' என காட்டமாக கூறினார்.
தேவ கௌடாவின் இந்த பேச்சு கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் தனது பேச்சை மறுத்து விளக்கமளித்த தேவகௌடா, 'எடியூரப்பாவை நான் திட்டவில்லை. அட்வகேட் ஜெனரல் அஷோக் ஹாரனஹள்ளியைத் தான் திட்டினேன்' என பல்டி அடித்துள்ளார்.
கெளடாவின் பேச்சு பாஜக தொண்டர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் உள்பட மாநிலத்தின் பல பகுதிகளிலும் கெளடாவின் கொடும்பாவியை எரித்து வரும் பாஜகவினர், தனது பேச்சுக்கு கெளடா மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்குத் தொடருவோம் என்றும் எச்சரித்துள்ளனர்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications