அதிநவீன 'அஸ்த்ரா' ஏவுகணை சோதனை
சாண்டிபூர்: விண்ணில் இருந்து விண்ணில் உள்ள இலக்கை தாக்கும் அதிநவீன உள்நாட்டு தயாரிப்பான 'அஸ்த்ரா' ஏவுகணை இன்று சோதித்துப் பார்க்கப்பட்டது.
இதுகுறித்து இந்திய ராணுவ தளவாடங்கள் ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு நிறுவன (டிஆர்டிஓ) அதிகாரிகள் கூறுகையில்,
'ஒரிஸ்ஸாவின் சாண்டிபூர் தளத்தில் இருந்து இன்று காலை இந்த பரிசோதனை நடவடிக்கைகள் துவங்கின. இரண்டு முறை முழுமையான சோதனை நடத்தப்பட்டது.
வான்வெளி மூலமாக வரும் அதிவிரைவு சூப்பர்சானிக் இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது இந்த அஸ்த்ரா அதிநவீன ஏவுகணை.
1.2 முதல் 1.4 மேக் (ஒரு மேக் என்பது மணிக்கு 1236 கி.மி) வேகத்தில் செல்லும் இலக்கைக் கூட இந்த அஸ்த்ரா ஏவுகணை துல்லியமாக தாக்கி அழிக்கும்.
மூன்ற வெவ்வேறு உயரங்களில் இந்த ஏவுகணைகள் சோதிக்கப்பட்டன. அனைத்து அம்சங்களும் திருப்திகரமாக அமைந்தது. இன்னும் பல கட்ட சோதனைக்கு பின்னரே படையில் சேர்க்கப்படும்' என்றனர்.












Click it and Unblock the Notifications