இந்திய மாணவர்களுக்கு ஜப்பான் பல்கலை.கள் வலை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐரோப்பா மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு அடுத்தபடியாக தற்போது ஜப்பான் பல்கலைகளும் இந்திய மாணவர்களை சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றன.

'ஸ்டடி இன் ஜப்பான் ஃபேர்' என்ற நிகழ்ச்சி டெல்லியில் இன்று (ஜனவரி 11) நடக்கிறது. டெல்லி பல்கலைக்கழகத்தின் தௌலத் ராம் கல்லூரியில் இந்த கல்வி கண்காட்சி நடக்கிறது.

இதில் ஜப்பானைச் சேர்ந்த 13 முன்னணி பல்கலைக்கழகங்கள் தங்கள் ஸ்டால்களை அமைத்துள்ளன. இளங்கலை, முதுகலை, ஆய்வுப் படிப்பு என பல்வேறு பட்டப்படிப்புகளில் இந்திய மாணவர்களை சேர்க்க இந்த பல்கலைகள் ஆர்வமுடன் கடைவிரித்துள்ளன.

மொழிப்பிரச்னை தடையாக அமையாமல் இருக்க ஆங்கிலம் மற்றும் ஜப்பான் என இருமொழி வழியிலும் இந்த படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

கண்காட்சிக்கு வரும் மாணவர்களுடன் பல்கலைக்கழக பிரதிநிதிகள் கலந்தாய்வு நடத்தி விருப்பமான பாடங்களில் உடனடியாக சேர்க்கையை நடத்த உள்ளனர்.

டெல்லியில் உள்ள ஜப்பான் தூதரகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+