விலைவாசி உயர மத்திய அரசும் காரணம்-மமதா பானர்ஜி
கொல்கத்தா: விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசும் காரணம் என்பதை மறுக்கமுடியாது. இதை கட்டுப்படுத்த பிரதமர் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் மமதா பானர்ஜி கூறினார்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மத்திய ரயில்வேத் துறை அமைச்சருமான மமதா பானர்ஜி நிருபர்களிடம் பேசுகையில்,
விலைவாசி மிகவும் உயர்ந்து விட்டது. இதற்கு மத்திய அரசும் ஒரு காரணம் என்பதை நான் மறுக்க மாட்டேன். விலைவாசி உயர்வு தொடர்பாக பிரதமர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும்.
அனைத்து மாநில முதல்வர்களை அழைத்தும் ஆலோசனை நடத்த வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் செயற்கையாக விலை உயர்த்தப்படுகிறது. இதற்கு மாநில அரசு அனுமதி கொடுக்கிறது. இங்கு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் மாநில அரசு எடுக்கவில்லை.
ஒவ்வொரு தடவை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடக்கும் போதும் நான் விலைவாசி உயர்வு பிரச்னையை எழுப்பி விவாதத்துக்கு கொண்டு வந்துள்ளேன்.
மாவோயிஸ்டுகள் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக எங்களிடம் யாரும் கலந்து ஆலோசிக்கவில்லை. இது தொடர்பாக நான் பிரதமரிடம் பேச இருக்கிறேன்' என்றார்.












Click it and Unblock the Notifications