கலைஞர் உயிர் காக்கும் திட்டம்- 25,000 பேர் பயன்
சென்னை: தமிழக அரசின் கலைஞர் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்புறுத்தி திட்டத்தின் கீழ் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 26, 193 பேருக்கு 560 தனயாரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் ரூ. 89 கோடி செலவில் அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரூ. 573 கோடி மதிப்பீட்டிலான இந்தத் திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ. 72,000 ஆண்டு வருமானம் உடைய குடும்பங்களுக்கு ரூ. 1 லட்சம் வரை சிகிச்சைக்கான செலவுகளை இந்தத் திட்டத்தின் மூலம் அரசே வழங்குகிறது. அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல், அதி நவீன வசதிகளைக் கொண்ட தனியார் மருத்துவமனைகளிலும் இத்திட்டத்தின் கீழ் மக்கள் சிகிச்சை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications