தெலுங்கானா: மத்திய அரசுக்கு மீண்டும் கெடு
டெல்லி: தெலுங்கானா பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு மேலும் அவகாசம் தேவை என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார் தெலுங்கானா ஆதரவு போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த டி.ஆர்.எஸ் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக நாளை வரை மத்திய அரசுக்கு தெலுங்கானா கட்சிகள் மீண்டும் கெடு விதித்துள்ளன.
ஆந்திராவில் தெலுங்கானா விவகாரத்தை தீர்க்க மத்திய அரசு கடந்த 5ம் தேதி கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.
மாநிலத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என புரியாமல் தவிக்கும் மத்திய அரசுக்கு பல்வேறு யோசனைகள் சொல்லப்பட்டு வருகிறது.
அரசியல் சாசன சட்டத்தின் 143(1) பிரிவின் கீழ் குடியரசுத் தலைவரின் மூலமாக உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை பெறலாமா என்பது குறித்தும் மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.
ஆனால், ஏற்கனவே பாபர்மசூதி இடிப்பு விவகாரத்தின் போது இதுபோன்ற ஆலோசனை கேட்கப்பட்டபோது உச்சநீதிமன்றம் தயக்கத்தையே வெளிப்படுத்தியது. இந்நிலையில் மத்திய அரசின் இம்முயற்சி எந்தளவுக்கு பலனளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருவேளை உச்சநீதிமன்றம் தனது உறுதியான கருத்தைக் கூறினாலும், அதை ஆந்திராவின் இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்வார்கள் என மத்திய அரசால் எந்த உத்தரவாதமும் தரமுடியாது. அதோடு, உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு அரசியல் சாயம் பூசும் முயற்சிகளும் நடக்கும்.
இவை ஒருபுறமிருக்க, பிரச்னையின் முடிவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆந்திராவில் ஏற்படக்கூடிய பாதிப்பையும் மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
ஒருவேளை, தனி தெலுங்கானா அமைக்கும் படி முடிவானால், தெலுங்கானா பகுதியில் அதற்கான ஒட்டுமொத்த புகழையும் டி.ஆர்.எஸ் கட்சி தட்டிச்சென்றுவிடும். தங்களின் போராட்டத்தால் தான் தனி தெலுங்கானா அமைந்ததாக அந்த தரப்பினர் மார்தட்டுவார்கள்.
அங்கே காங்கிரசுக்கு அரசியல் லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. மறுபுறத்தில் ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரத்தில் ஒட்டுமொத்த செல்வாக்கையும் காங்கிரஸ் இழக்க நேரிடும்.
இந்நிலையில் இவ்விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து ஆலோசித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை தன்னை வந்து சந்தித்த டி.ஆர்.எஸ் தலைவர் சந்திரசேகர ராவிடமும் பிரதமர் அவகாசம் கேட்டு அனுப்பியுள்ளார்.
'எனக்கும் தனி தெலுங்கானா அமைக்க விருப்பம் தான். ஆனால் அந்த பணிகள் சுமூகமான சூழலில் நடந்தாகவேண்டும். அதுவரை சற்று பொறுத்திருங்கள்' என சந்திரசேகர ராவிடம் பிரதமர் மன்மோகன் சொல்லி அனுப்பியுள்ளார்.
சுமார் ஒருவாரம் டெல்லியில் தங்கியிருந்த சந்திரசேகர ராவ் பிரதமரின் பதிலால் திருப்தியடையவில்லை. காங்கிரஸ் தலைவர் சோனியாவை இன்று சந்திக்க திட்டமிட்டார். ஆனால் முடியவில்லை. எனவே வாடிய முகத்துடன் ஹைதராபாத் திரும்பிவிட்டார் சந்திரசேகர ராவ்.
மத்திய அரசு இவ்விவகாரத்தை ஆறப்போடுவதால் தெலுங்கானா போராட்டத்தின் வீரியம் எக்காரணம் கொண்டும் குறைந்துவிடக்கூடாது என்ற கவலை தான் இப்போது டிஆர்எஸ் தலைவருக்கு.
எனவே நாளை தெலுங்கானா தனி மாநில கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் வலுவான நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் எப்போது அமைக்கப்படும் என 12ம் தேதிக்குள் (நாளை) மத்திய அரசு வெளியிட வேண்டும் என்றும், இல்லையேல் பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை உள்ள எல்லா உறுப்பினர்களையும் பதவி விலகுமாறு கேட்டுக் கொள்வோம் என அக்குழு அறிவித்துள்ளது.
சிரஞ்சீவியை நெருக்கும் மாஜி நிர்வாகிகள்:
இதற்கிடையே, பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவரும், நடிகருமான சிரஞ்சீவி ஆந்திராவை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அவருக்கு எதிராக மாஜி நிர்வாகிகள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
சிரஞ்சீவியின் தெலுங்கானா எதிர்ப்பு நிலைப்பாட்டால், தெலுங்கானா பகுதியை சேர்ந்த அவரது கட்சி நிர்வாகிகள் பதவி விலகி பிரஜா தெலுங்கானா சமிதி என்ற பெயரில் கட்சி தொடங்கினார்கள்.
இக்கட்சியின் தலைவர் கிருஷ்ண பிரசாத் மற்றும் நிர்வாகிகள் கரீம்நகர் ஒன்டலின் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதில், 'பிரஜா ராஜ்ஜியம் கட்சி தலைவர் சிரஞ்சீவிக்கு தெலுங்கானா பகுதியில் இருந்து ரூ.18 லட்சம் வசூல் செய்து கொடுத்தோம். அதை அவர் எங்களுக்கு திருப்பி தரவில்லை. அப்பணத்தை சிரஞ்சீவி எங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications