பிரதமரிடம் தரூர் விளக்கம் - காங். சமாதானம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜவஹர்லால் நேருவின் கொள்கைகள் குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சவாளி எம்.பி. பேசிய பேச்சை மறுத்துப் பேசாமல் கிட்டத்தட்ட ஆமோதித்துப் பேசியதால் பெரும் சர்ச்சையில் சிக்கிய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர், பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். இதையடுத்து இந்தப் பிரச்சினை முடிந்து போனதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

உலக விவ​கா​ரங்​க​ளுக்​கான இந்​தி​யக் கவுன்​சில் என்ற அமைப்​பின் சார்​பில் கடந்த சனிக்​கி​ழமை டெல்​லி​யில் கருத்​த​ரங்​கம் நடந்​தது.​ அந்த நிகழ்ச்​சி​யில் தலை​வ​ராக சசி தரூர் கலந்​து​கொண்​டார்.​

பிரிட்​டிஷ் தொழி​லா​ளர் கட்​சி​யைச் சேர்ந்த பிக்கு பரேக் என்ற பிரிட்​டிஷ் நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர் இந்​திய வம்​சா​வ​ழி​யைச் சேர்ந்​த​வர்.​ அவர் முத​லில் பேசு​கை​யில்,​​ இந்​திய வெளி​யு​ற​வுக் கொள்​கை​யா​னது இந்​தி​யா​வின் நலன்​களை மட்​டும் கவ​னிப்​ப​தா​கவோ,​​ எதிர்​கா​லத்​தில் இந்​தி​யா​வுக்கு ஏற்​ப​டக்​கூ​டிய ராணுவ ரீதி​யான அச்​சு​றுத்​தல்​களை மன​தில் கொண்​ட​தா​கவோ ​(தொலை​நோக்​கு​டன்)​ இருக்​க​வில்லை.​

உல​கம் முழுக்க உள்ள நாடு​கள் நேர்மை,​​ நாண​யத்​து​டன் எப்​படி நடந்​து​கொள்ள வேண்​டும் என்று நீதி போத​னையை வலி​யு​றுத்​தும் ஆவ​ணங்​க​ளின் தொகுப்​பா​கத்​தான் இருக்​கி​றது,​​ இத​னால்​தான் சர்​வ​தேச அரங்​கில் பல பின்​ன​டை​வு​கள் இந்​தி​யா​வுக்கு ஏற்​பட்டு வரு​கின்​றன.​

இந்​திய நாட்​டின் தேவைக்​கேற்ற கொள்​கை​யாக இல்​லா​மல்,​​ ஆசிய நாடு​க​ளின் பிர​தி​நி​தித்​து​வக் கோட்​பாடு போல கொள்​கை​களை வகுத்​த​தும் கடைப்​பி​டித்​த​தும் இந்​தி​யா​வுக்கு எந்த நன்​மை​யை​யும் தர​வில்லை என்று பேசி​னார்.

அடுத்துப் பேசிய சசி தரூர், பரேக்கின் சில கருத்​து​களை என்​னால் ஏற்க முடி​யா​விட்​டா​லும் பல கருத்​து​களை நான் ஏற்​கி​றேன்;​ நாங்​கள் ஒரே மாதி​ரி​யான சிந்​த​னை​யோட்​டம் உள்​ள​வர்​கள் என்​று கூறினார்.

நேரு வகுத்த வெளியுறவுக் கொள்கைகளைத்தான் இந்திய அரசு இதுநாள் வரை கடைப்பிடித்து வருகிறது. அப்படிப்பட்ட நேரு​வின் கொள்​கை​க​ளால் இந்​திய நல​னுக்கு ஒரு பல​னும் இல்லை என்று பரேக் பேசி​னார்,​​ அதை சசி தரூர் வழி​மொ​ழிந்​தார்;​ காங்​கி​ரஸ் கட்​சி​யி​லேயே இருந்​து​கொண்டு அக் கட்​சி​யின் மூத்த தலை​வர் நேரு​வின் கொள்​கை​க​ளையே குறை​கூ​றி​ விட்​டார் என்று மீடியாக்கள் செய்தி வெளியிட்டதால் தரூருக்கு பெரும் சிக்கலாகி விட்டது.

வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் பாஜகவினரின் வாயைத் திறந்து அல்வாவை திணித்து மெல்லவும் வைத்தது போலாகி விட்டது தரூரின் சொதப்பல் பேச்சு. இதைத்தானே நாங்கள் இத்தனை காலமாக சொல்லிக் கொண்டிருந்தோம், இப்போது தரூரே சொல்லி விட்டார் பாருங்கள் என்று கூறி வருகிறது பாஜக.

இதனால் காங்கிரஸ் கட்சி பெரும் கடுப்பாகி விட்டது. ஏற்கனவே தரூரின் ட்வீட்டர் செய்திகளால் காங்கிரஸ் கட்சிக்கு ஏகப்பட்ட சங்கடங்கள் ஏற்பட்டு அதை ஒரு வழியாக சமாளித்த நிலையில் இப்போது நேரு தலையிலேயே கையை வைத்து விட்டாரே என்று தரூர் மீது காங்கிரஸார் கோபம் கொண்டனர்.

தொடர்ந்து அதிகப்பிரசிங்கித்தனமாக, அதி புத்திசாலித்தனமாக கருதிக் கொண்டு பேசுகிறாரே தரூர் என்று காங்கிரஸ் தலைவர்கள் காட்டமாகி விட்டனர்.

இவரெல்லாம் ஏன் அமைச்சராக நீடிக்கிறார் என்றும் பட்டவர்த்தனமாக கேட்கத் தொடங்கி விட்டனர் காங்கிரஸ் தலைவர்கள்.

இதையடுத்து விளக்கம் அளித்த தரூர், நான் சரியாகத்தான் பேசினேன். ஆனால் மீடியாக்கள்தான் தவறாக, திரித்து வெளியிட்டு விட்டன என்று அப்பாவி மீடியாக்கள் மீது பழியைப் போட்டார்.

மேலும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் நேரில் பார்த்து நடந்ததை விளக்கினார். இதையடுத்து தரூர் விஷயத்தை முடித்துக் கொள்ள காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர்களான அபிஷேக் சிங், ஷகீல் அக்தார் ஆகியோர், தான் பேசி​யதை பத்​தி​ரி​கை​கள் திரித்து வெளி​யிட்​டு​விட்​டன என்று சசி தரூர் விளக்​கம் அளித்​து​விட்​ட​தால் இனி இதில் எந்த சர்ச்​சை​யும் இல்லை என்று கூறி விட்டனர்.

ஆக, தரூர் பேசியதை செய்தியாக வெளியிட்ட மீடியாக்கள்தான் இப்போது தப்பு செய்து விட்டதாக மாறி விட்டது அல்லது காங்கிரஸ் மாற்றி விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+