உல்லாச வெறி-வாலிபர் கொலை: 3 பெண்கள் கைது
சென்னை: குடிபோதையில் உல்லாசத்துக்கு அழைத்த வாலிபரை அடித்துக்கொலை செய்ததாக 3 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை நல்லாங்குப்பம் பகுதியை சேர்ந்த பெயிண்டர் ஆதி (23). மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து பாதியில் நிறுத்தி விட்டார். பின்னர் 131வது வட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளராக பணியாற்றி வந்தார்.
இவர் போரூரைச் நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். நந்தினி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றிருந்தார்.
வீட்டில் தனியாக தங்கி இருந்த ஆதிக்கும் வனிதா என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு ஆதி குடிபோதையில் வனிதாவை தேடி எம்.ஜி.ஆர்.நகர் அம்பேத்கார் குடிசை பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார்.
வீட்டில் தூங்கி கொண்டிருந்த வனிதாவை உல்லாசத்திற்கு அழைத்தார். வனிதா மறுத்ததால் பலவந்தபடுத்தியுள்ளார். இதனால் வனிதா கூச்சல் போடவே சத்தம் கேட்டு அருகில் இருந்த வனிதாவின் உறவுக்கார பெண்கள் ஓடி வந்தனர்.
ஆதியை வெளியே போகுமாறு கண்டித்தனர். ஆனால் போதையில் இருந்த ஆதி, வனிதா மீது ஆவேசமாக பாயவே, அவர்கள் ஒரு கயிற்றை ஆதி மீது வீசி, கட்டி இழுத்துள்ளனர்.
மீண்டும் திமிறிக்கொண்டு பாய முயற்சித்த ஆதியை பெண்கள் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.
பின் மண்டையில் பலத்த காயமடைந்த ஆதி அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டதை உணர்ந்த வனிதா, உறவு பெண்கள் ராதா, பொட்டுகனி ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.
கொலையை மறைக்க முடிவு செய்த அவர்கள், ஆதியின் உடலை வெளியில் தூக்கி வந்து போட்டு இரும்பு ராடு ஒன்றின் மீது தவறி விழுந்து இறந்ததுபோல உடலை சாய்த்து வைத்தனர். பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் அசோக் நகர் போலீசார் வந்து விசாரித்ததில் ஆதி கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வனிதா, ராதா, பொட்டுக்கனி ஆகிய 3 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை கணவர் கொல்லப்பட்ட தகவல் அறிந்து கைக் குழந்தையுடன் ஓடி வந்த நந்தினி, குடிசைப் பகுதியில் கஞ்சா விற்றதை கண்டித்ததால் தான் என் கணவர் கொல்லப்பட்டார் என குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications