இந்தியா-'டாப் 10' விஞ்ஞானிகளுக்கு தீவிரவாதிகள் குறி!

அந்த விஞ்ஞானிகள் அணுசக்தி, பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையைச் சேர்ந்தவர் என்பதால் பாதுகாப்பு கருதி அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
மஸ்கட்டிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட பயங்கரவாதி சர்பிராஸ் நவாஸிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது இந்த ரகசிய தகவல் கசிந்தது.
இந்திய, வங்கதேச எல்லையில் அண்மையில் கைது செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி நசீரிடம் நடத்திய விசாரணையின் மூலமும் இத்தகவல் போலீசாரால் உறுதிசெய்யப்பட்டது.
நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அந்த விஞ்ஞானிகள் பணிபுரிவதால் அவர்களின் பெயர்கள் வெளியடப்படவில்லை. தீவிரவாதிகள் குறிவைதிருப்பதாக அறியப்படும் 10 விஞ்ஞானிகள் பணிபுரியும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தீவிரவாதிகள் மீண்டும் கடல் வழியாகத் தாக்குதல் நடத்தக்கூடும் என ஏற்கனவே உளவுத்துறை எச்சரித்தது. அதேபோல் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஹெட்லி பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை படம் பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹெட்லி, நவாஸ், நசீர் உள்ளிட்டோரிடம் விசாரணையில் கிடைத்த பல்வேறு தகவல்களையும் ஒருங்கிணைத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் பணியில் பாதுகாப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications