Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஸி: இந்தியர் எரித்து கொலை-2 பேர் சிக்கினர்

Subscribe to Oneindia Tamil

Australian Flag
சிட்னி: ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸில் எரித்துக் கொல்லப்பட்ட இந்தியர் ரஞ்சித் சிங்கின் கொலை தொடர்பாக 2 பேரை ஆஸ்திரேலிய போலீஸார், சிட்னி விமான நிலையத்தில் வைத்துப் பிடித்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய போலீஸார் இருவரின் பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்து கொண்ட பின்னர் விடுவித்தனர். அவர்கள் இந்தியர்கள் என்று தெரிகிறது.

இந்த இருவரும் ரஞ்சித் சிங்கால் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் என்று தெரிகிறது. 25 வயதான ரஞ்சித் சிங்கிந் உடல், தென் மேற்கு நியூ சவுத் வேல்ஸில் உள்ள, வில்பிரிக்கி என்ற இடத்தில், வில்ஜா சாலைக்குப் பின்புறம், கடந்த டிசம்பர் 29ம் தேதியன்று பாதி எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

புலன் விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனையில் கழுத்தை அறுத்துக் கொன்று விட்டு பின்னர் உடலை எரிக்க முயன்றது தெரிய வந்தது.

இந்த நிலையில் சிட்னி விமான நிலைய புறப்பாட்டு பகுதியில், இன்று இரண்டு பேர் சிக்கினர். இவர்கள் சிங்கப்பூர் வழியாக நேபாளம் செல்ல முயன்றனர். இருவரையும் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களுக்கும், ரஞ்சித் சிங்குக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட்டது. பின்னர் அவர்களை விடுவித்த போலீஸார், பாஸ்போர்ட்டுகளைப் பறிமுதல் செய்து கொண்டனர். இதனால் அவர்களால் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பிடிபட்ட இருவரும் அவ்வப்போது ரஞ்சித் சிங்கால் ஆஸ்திரேலியாவுக்கு வேலைக்காக வரவழைக்கப்படுபவர்கள் என்று தெரிகிறது.

இதுபோல பலரை இந்தியாவிலிருந்து வேலைக்கு அழைத்து தனது பண்ணையில் வேலைக்கு அமர்த்துவது ரஞ்சித் சிங்கின் வழக்கம். அவர்களுக்கு சரியான முறையில் சம்பளம் தராதது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஊழியர்கள் சிலரே ரஞ்சித் சிங்கைக் கொன்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகிறார்களாம்.

மேலும் டிசம்பர் 27ம் தேதியன்று ரஞ்சித் சிங் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் போலீஸார் கூறுகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அடுத்தடுத்து 2 இந்தியர்கள் கொல்லப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

டிசம்பர் 29ம் தேதி ரஞ்சித் சிங்கின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. ஜனவரி 2ம் தேதி நிதின் கார்க் என்பவர் மெல்போர்ன் நகரில் குத்திக் கொல்லப்பட்டார்.

அதேபோல மெல்போர்னின் எஸ்ஸன்டன் பகுதியில், ஜஸ்பிரீத் சிங் என்ற 29 வயது இந்தியரை எரித்துக் கொல்ல முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ரஞ்சித் சிங் கொலையில் இனவெறி இடம் பெறவில்லை என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது.

ஜஸ்பிரித் விவகாரத்தில் திருப்பம்...

இதற்கிடையே, சீக்கியர் ஜஸ்பிரிதீ சிங் கொலை முயற்சி வழக்கில், அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று போலீஸார் கூறத் தொடங்கியுள்ளனர். இதை ஜஸ்பிரீத்தின் மனைவி கண்டித்துள்ளார்.

எஸ்ஸன்டன் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை மனைவியுடன் டின்னருக்குப் போய் விட்டு வீடு திரும்பிய ஜஸ்பிரீத் சிங்கை நான்கு பேர் கொண்ட கும்பல் தடுத்துத் தாக்கி தீவைத்து விட்டுத் தப்பியதாக கூறப்பட்டது.

உடலில் பற்றிய தீயுடன் காரிலிருந்து ஓடி வந்து அலறினார் ஜஸ்பிரீத் சிங். அவருக்கு 15 சதவீத தீக்காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இது தற்கொலை முயற்சியாக இருக்கலாம் என போலீஸார் கூறியுள்ளனர். ஆனால் இதை ஜஸ்பிரீத்தின் மனைவி பரம்ஜித் கெளர் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஏன் இப்படிக் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. தன்னைத் தானே அவர் ஏன் எரித்துக் கொள்ள வேண்டும். ஏன் இவ்வாறு அவர் செய்ய வேண்டும். அதற்கான காரணம் எதுவுமே இல்லை என்றார்.

இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜஸ்பீரை மீண்டும் விசாரிக்க போலீஸார் முயன்று வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+