'இந்தியாவைவிட ஆஸியில் இந்தியர் பாதுகாப்பாக உள்ளனர்'

ஆஸ்திரேலியாவில் இந்திய இளைஞர்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் கொலைகளும் ஆரம்பித்துள்ளன.
இந் நிலையில் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது ஆஸ்திரேலியா.
சிமோன் கூறுகையில், தங்களது சொந்த நாட்டை (இந்தியா) விட, ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர். வேண்டுமானால், புள்ளி விவரங்களை பாருங்கள். இந்தியர்கள் அவர்களது சொந்த நாட்டை விட இங்கு மிகவும் பாதுகாப்பாக உள்ளது தெரியும் என்றார்.
அந் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் சைமன் கிரியேன் கூறுகையில், இது ஒரு மிக சிக்கலான விவகாரம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், இவை இனரீதியான தாக்குதல்கள் என்பது இதுவரை நிரூபணமாகவில்லை. இதனால் இந்திய மீடியாக்கள் இந்த விவகாரத்துக்கு இனச் சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
ஆஸி அமைச்சருடன் கிருஷ்ணா ஆலோசனை:
இந் நிலையில் சைமன் கிரியேனுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்கள், இரு இந்தியர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று கிருஷ்ணா கேட்டுக்கொண்டார்.
இந்த ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணா, ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது குறித்தும், விசாரணைகளை விரைவுப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளேன். குற்றவாளிகள் விரைவில் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினேன் என்றார்.












Click it and Unblock the Notifications