என்.ஆர்.ஐகளுக்கு ஓட்டுரிமை-பால் தாக்கரே எதிர்ப்பு

இந்தியாவில் அடுத்து நடைபெறும் பொதுத்தேர்தலின் போது 'என்ஆர்ஐ'க்கள் தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்யலாம் என பிரதமர் மன்மோகன் சிங் இரு தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு பால்தாக்கரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சிவசேனாவின் பத்திரிகையான 'சாம்னா'வில் பால்தாக்கரே எழுதியுள்ள கட்டுரையில்,
என்.ஆர்.ஐகளிடம் பணம் இருப்பதற்காக மட்டும் அவர்களுக்கு ஓட்டுரிமையை வழங்கிவிட முடியாது. இங்கே பிறந்து வெளிநாடுகளில் சென்று செட்டில் ஆகிவிட்ட மண்ணின் மைந்தர்களிடம் இந்தியத் தாய் பணத்தை எதிர்பார்க்கவில்லை.
அதற்கு பதிலாக அவர்கள் தங்கள் தாய்நாட்டுக்கு வந்து, தாங்கள் கடல் கடந்து கற்ற ஞானத்தை, அறிவியல் தொழில்நுட்பத்தை இங்குள்ள மக்களுக்கு வழங்க வேண்டும்.
அவர்கள் இந்தியாவில் வந்து தங்கியிருந்து தங்களின் நேரத்தையும், அறிவையும், அனுபவத்தையும் உள்ளூர் மக்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்.
ஓட்டு போடுவதை விட இந்த பணிதான் மிகவும் மேன்மையானது, வரவேற்கத்தக்கது, பலன் அளிக்கக்கூடியது.
மேலும், என்.ஆர்.ஐகள் தாங்கள் தங்கியுள்ள நாடுகளை தாய்நாடாக கருத வேண்டும். இல்லையெனில் இரட்டை விசுவாசம் காட்டுபவர்கள் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications