பாமக வென்றால் தான் மக்களை திமுக மதிக்கும்-ராமதாஸ்

பென்னாகரம் இடைத் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜி.கே.எம். தமிழ்க்குமரனை ஆதரித்து நல்லம்பள்ளியில் பிரச்சாரம் செய்து அவர் பேசுகையில்,
திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி, எப்போதும் நான் வெளியிடும் அறிக்கைக்கு பதில் கூற முடியாமல் திணறுவார். இத்தொகுதியில் பாமக வெற்றி பெற்றால் அதிகாரத்தில் உள்ள திமுக வருங்காலத்தில் மக்களை மதித்து நடக்கும்.
பாமகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி தர்மபுரி மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரியை பெற்றுத் தந்தார். முன்னாள் மத்திய அமைச்சர் வேலு தர்மபுரிக்கு ரூ.5 கோடியில் ரயில்வே நிலையம் அமைத்துத் தந்தார்.
பாமகவில் பொது செயலாளர், தலைவர், பொருளாளர் பதவிகள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினருக்கே வழங்கப்பட்டுள்ளன என்றார்.
வாக்காளர் எண்ணிக்கை குறைய திமுக சதி காரணம்:
இந் நிலையில் சட்டமன்றத்தில் நேற்று பேசிய அக் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி,
தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கை கடந்த ஆறு ஆண்டுகளில் பெருமளவு குறைறைந்துள்ளது. இதற்கு ஆளும் கட்சியின் சதியே காரணம்.
இந்தியாவில் 18 வயதானவர்கள் வாக்குரிமை செலுத்தும் உரிமை பெறுவர். 2002ம் ஆண்டிலிருந்து 2006ம் ஆண்டு வரை அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் 52.35 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். முந்தைய தேர்தலில் வாக்களித்தவர்கள் பெயர்கள் தற்போது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில் வாக்காளர் எண்ணிக்கை 14.5 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் தமிழகத்தில் இது சரிந்துள்ளதற்கு ஆளும் கட்சியின் சதியே காரணம் என்றார்
இதற்கு பதிலளித்த அமைச்சர் வேலு, வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கும் பணியை தேர்தல் ஆணையம்தான் செய்கிறது என்றார்.
அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் பேசுகையில், வாக்காளர் பட்டியல் நகல் அனைத்துக் கட்சியிடமும் தர வேண்டும். ஆனால் அது தரப்படவில்லை என்றார்.
தொடர்ந்து மணி பேசுகையி்ல், தேர்தல் ஆணையத்தின் பணி என்றாலும் அதை ஆசிரியர்கள் உள்ளிட்ட மாநில அதிகாரிகள்தான் மேற்கொள்கின்றனர் என்றார்.
இதற்கு பதிலளி்த்த அமைச்சர் வீராசாமி:, பென்னாகரம் இடைத் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டதைத்தான் தேர்தல் ஆணையம் செயல்படுத்தியுள்ளதே தவிர, ஆளும் கட்சியின் கருத்தைக் கேட்கவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications