விலைவாசி குறையுமா?: 'நான் ஜோசியக்காரன் அல்ல'-பவார்

இதன்மூலம், விலைவாசி உயர்வால் மக்கள் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியுள்ளார் சரத் பவார்.
உணவுப் பொருட்களின் விலை கடந்த 3 மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. குறிப்பாக சர்க்கரையின் விலை 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இதனால் சரத்பவார் பதவி விலக வேண்டும் என்று பாஜக, இடதுசாரிகள் கோரியுள்ளன.
இந் நிலையில் சர்க்கரை இறக்குமதிக்கான காலக்கெடுவை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் விலைவாசி குறித்து இன்று மத்திய கேபினட்டின் முக்கியக் குழு கூடி விவாதிக்கவுள்ளது.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய பவார், விலைவாசி எப்போது குறையும் என்று சொல்ல நான் ஒன்றும் ஜோசியக்காரன் அல்ல.
மாயாவதி தான் காரணம்:
இறக்குமதி கச்சா சர்க்கரையை பதப்படுத்துவதற்கு உத்தரப் பிரதேச அரசு தடை விதித்துள்ளது. இதனால், இறக்குமதி செய்யப்பட்ட 8 லட்சம் டன் கச்சா சர்க்கரை, கண்ட்லா துறைமுகத்தில் 2 மாதங்களுக்கு மேலாக தேங்கி கிடக்கிறது.
அதை பதப்படுத்த சர்க்கரை ஆலை அதிபர்களை அனுமதித்து இருந்தால், மாதத்துக்கு கூடுதலாக 2.5 லட்சம் டன் சர்க்கரை கிடைத்து இருக்கும். சர்க்கரை விலை குறைந்திருக்கும்.
ஆனால், மாயாவதி அரசின் தடையால் சர்க்கரை விலை உயர்ந்துள்ளது. நான் கடிதம் எழுதியும் உத்தரப் பிரதேச அரசு ஏற்கவில்லை. எனவே, அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றியும் விவாதிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications