புதிய சட்டசபையில்.. கருணாநிதி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய சட்டப் பேரவையில் நாட்டைப் பற்றிய,​​ மக்களைப் பற்றிய நினைவுடன் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னை கோட்டையில் உள்ள சட்டப் பேரவையில் நேற்று முடிவடைந்த கடைசி கூட்டத் தொடரில் அவர் பேசுகையில்,

பேரவையில் ஒரு கருத்தைச் சொன்னால்,​​ அந்தக் கருத்தின் பால் எத்தகைய எதிரொலி ஏற்படும்,​ எத்தகைய நிலைமைகள் உருவாகும்., அந்தக் கருத்துகளை சொல்லாமல் இருப்பது நல்லதல்லவா என்றெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.​

இதை நான் அறிந்த வரையில் என்னுடைய வாழ்க்கையிலும்,​​ இந்த சட்டப் பேரவையிலும் கடைப்பிடித்து வருகிறேன்.

பேரவையில் எத்தனையோ நல்ல நிகழ்ச்சிகள் நடைபெற்று இருக்கின்றன.​ விரும்பத்தகாத நிகழ்ச்சிகளும் நடைபெற்றிருக்கின்றன.​ அவை என்னென்ன என்பதை பற்றிப் பேசி மறுபடியும் அதே நிகழ்ச்சியின் தொடர்ச்சியை இங்கே நான் ஏற்படுத்த விரும்பவில்லை.

அந்த நிகழ்ச்சிகளையெல்லாம் மறந்து விட்டு நாம் குடிசெல்கின்ற புதிய இடத்திலாவது அந்த நிலை இல்லாமல் நாட்டைப் பற்றிய நினைவு,​​ மக்களைப் பற்றிய நினைவு,​​ இவைகளோடு நம்முடைய பணிகளை அங்கே தொடங்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+