இன்னொரு ஈழப்போர்!-அலறும் ராஜபக்சே

விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஈழப்போரில் பன்னாட்டு சக்திகளின் கூட்டுடன் பெற்ற வெற்றியை தேர்தல் ஆதாயமாக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக அதிபர் தேர்தலை அறிவித்தார் ராஜபக்சே.
ஆனால், இந்தத் தேர்தலில் அவருக்கு எதிராக நின்றவர், தமிழர் அழிப்பில் பெரும் முனைப்பு காட்டிய அவரது முன்னாள் தளபதி சரத் பொன்சேகா.
இப்போது தமிழர் கட்சிகளில் பெரும்பான்மையானவை சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்றன.
தமிழர்கள் வாக்கு ராஜபக்சேவுக்கு கிடைக்காத நிலை உருவாகி வருகிறது. சூழலை தனக்கு சாதகமாக்க, பல சலுகைகளை அறிவித்து வருகிறார் ராஜபக்சே. ஆனாலும் தமிழர்கள் பகுதியில் அவர் பிரச்சாரத்துக்கு சென்றபோது கடும் எதிர்ப்பு காணப்பட்டது.
எனவே மீண்டும் சிங்களர்களை உசுப்பேற்றி ஓட்டு வாங்குவதில் குறியாக உள்ளார்.
அதில் ஒரு பகுதியாக தனது தேர்தல் அறிக்கையின் இரண்டாம் பகுதியை வெளியிட்டார் மகிந்த.
அதில், இலங்கையை வலிமையான நாடாக்கப் போவதாக குறிப்பிட்டுள்ள ராஜபக்சே, சிங்களர்களை கவரும் வகையில் பல வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது:
2005ல் நான் ஆட்சிக்கு வந்த இந்த நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்தது. அதிலிருந்து நான்தான் மீட்டேன்.
விடுதலைப் புலிகளை ஒடுக்க நான் எடுத்த முயற்சிகளுக்கு சில நாடுகள் முட்டுக்கட்டை போட்டன. அந்த நாடுகளுக்கு நான் அடிபணியவில்லை. அந்த நாடுகளின் சிபாரிசுகளை வீசியெறிந்து விட்டேன்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரை நிறுத்த முயன்று தோற்றுப் போனவர்கள் இப்போது ஒருங்கிணைந்து எனக்கு எதிராக செயல்படுகின்றனர். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றனர்.
இன்னொரு ஈழப் போராட்டத்துக்கு தயாராகி வருகின்றனர். இதற்கு நாம் இடம் தரக்கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications