சென்னையில் ஷேர்ஆட்டோ விபத்து- சிறுமி பலி
சென்னை: ஒன்பது பேரை ஏற்றிச்சென்ற ஷேர் ஆட்டோ விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுமி உயிரிழந்தார்.
கானாத்தூரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் தீபா (வயது 6). பொங்கல் பண்டிகையையொட்டி துணி வாங்க சக்திவேல் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திருவான்மியூருக்கு சென்றார்.
துணி வாங்கிய பின் அவர்கள் ஷேர் ஆட்டோவில் ஏறி வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பனையூர் வழியாக ஷேர் ஆட்டோ சென்ற போது கோயம்பேடு நோக்கி சென்ற அரசு பஸ் மோதியது.
இதில் ஷேர் ஆட்டோ நொறுங்கியது. அதில்பயணம் செய்த சிறுமி தீபா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் ஷேர் ஆட்டோவில் இருந்த சக்திவேல் மனைவி சாந்தி, மகள் அனிதா மற்றும் உறவினர்கள் ஆகிய எட்டுபேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆட்டோ டிரைவர் தர்மாவும் காயமடைந்தார். அரசு பஸ் டிரைவர் தப்பியோடி விட்டார். சாஸ்திரி நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பஸ் டிரைவரை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications