எருமேலி: லாரி கவிழ்ந்து 11 ஐயப்ப பக்தர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

எருமேலி: எருமேலி அருகே லாரி கவிழ்ந்ததில் 11 ஐயப்ப பக்தர்கள் பலியாகினர். ஆந்திராவில் இருந்து மணல் லாரியில் பயணம் செய்த பக்தர்கள் மணலுக்குள் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து ஒரு மணல் லாரியில், மணலை நிரப்பி அதன் மேல் அமர்ந்து 40க்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர்.

நேற்று இரவு 7 மணி அளவில் கோட்டயம் மாவட்டம் எருமேலி பம்பாவாலி அருகே கனமலை என்ற இடத்தில் வந்தபோது கட்டுபாடு இழந்த லாரி ரோட்டோர பள்ளத்தில் தலை குப்புர கவிழந்தது. லாரியில் இருந்த மணலுக்கு அடியில் பக்தர்கள் சிக்கி கொண்டனர்.

விபத்தில் லாரி சிக்கிக் கொண்டதும், அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் போதிய வெளிச்சமின்மையாலும், சாரல் மழையாலும் மீட்பு பணி தாமதமானது. இரவு 9 மணி வரை 11 பக்தர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

காயமடைந்த 25க்கும் மேற்பட்டவர்கள் எருமேலி, கோட்டயம், காஞ்ஞிரப்பள்ளி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரை காணாததால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு எல்லா அவசர உதவிகளையும் செய்ய கோட்டயம் கலெக்டருக்கு கேரள அறநிலையத்துறை அமைச்சர் ராமசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் இதே பகுதியில் ஆந்திர மாநில பக்தர்கள் வந்த பஸ் கவிழ்ந்து 16 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+