தன்னை காக்கவே கூட்டணி-விஜய்காந்த் குறித்து பாஜக

நிருபர்களிடம் பேசிய அவர், பொங்கல் தினவிழா, உழவர் தின விழா கொண்டாடும் இந்த வேளையில் விவசாயிகளின் நிலை மிகவும் வேதனையாக உள்ளது.
திமுக கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் தாங்கள் கொண்டிருந்த இந்து விரோத கொள்கைகளை சற்றும் மாற்றாமல் இன்றும் அதையே கடைபிடித்து வருகிறார்கள். திமுக அரசு சிறுபான்மையினர் வாக்குகளை பெறவேண்டும் என்று நினைப்பதில் தவறு இல்லை. அதற்காக பெரும்பான்மை இந்து சமுதாயத்தின் தெய்வங்களையும், பழக்கவழக்கங்களையும், சமய சின்னங்களையும் கொச்சையாக பேசுவதும், கேலி, கிண்டல் செய்வதும் தொடர்ந்து நடந்து வருவது கடும் கண்டனத்துக்குரியது.
பள்ளியில் படிக்கும் சிறுபான்மை, முஸ்லிம், கிருஸ்துவ மாணவர்களுக்கு மட்டும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 439 பேருக்கு ரூ.27 கோடி கல்வி உதவித் தொகை வழங்கி இந்து மாணவர்கள் மத்தியில் கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை எப்படி வழங்கப்பட்டதோ அதேபோல அனைத்து மாணவர்களுக்கும் பாகுபாடு இல்லாமல் வழங்க வேண்டும்.
போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு 1992ம் ஆண்டு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்குவதை தடைசெய்து அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால் சிறுபான்மை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மட்டும் 44 இலவச ஆட்டோ பெர்மிட்கள் வழங்கி பெரும்பான்மை இந்து ஆட்டோ ஓட்டுநர்கள் மனதில் ஏக்கத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளனர்.
பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து நிர்வாகிகளிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.
நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ராகுல்காந்தி மிகப்பெரிய அல்வா கொடுத்துவிட்டார். நதிகள் இணைப்பு திட்டத்தை பாஜக ஆட்சிக்கு வந்தால் நடைமுறைப்படுத்தி காட்டுவோம்.
ஜனநாயகத்தை காக்க எனது தலைமையில் வாருங்கள் என்று விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். இவ்வாறு ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் சொல்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் யாரால் செயல்படுத்த முடியும் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். இன்று தன்னை காப்பாற்றிக் கொள்ளும் நிலையில் விஜயகாந்த் உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட தேமுதிக டெபாசிட் வாங்கவில்லை. ஆனால் பாஜக டெபாசிட் வாங்கியுள்ளது. பாஜக தமிழ்நாட்டில் பலவீனமாக இல்லை. மேலும் கட்சியை பலப்படுத்தும் வேலையில் தீவிரமாக உள்ளோம். தமிழகத்தை தாமரையின் தடாகமாக மாற்றியே தீருவோம் என்றார்.
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக்குவோம்:
இந் நிலையில் ராமேஸ்வரம் வந்த பாஜக எம்.பி லால்ஜி டாண்டன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தேசிய ஒருமைபாட்டுக்கு எடுத்துகாட்டாக விளங்குகிறது. ஆனால் கோயிலின் சுகாதாரம் மிக மோசமாக உள்ளது. இதை சீரமைத்து, பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர லோக்சபாவில் குரல் கொடுப்பேன்.
பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் ராமர் பாலம் இருப்பது உண்மை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை 'நாசா'வும் உறுதி செய்துள்ளது. கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேய அரசும் இதை உறுதி செய்துள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ராமர் பாலம் பாதுகாக்கப்பட்டு தேசிய சின்னமாக அறிவிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications