குடியரசு தினம்-தீவிரவாதிகள் சதி-மாநிலங்களுக்கு எச்சரிக்கை!
டெல்லி: உ.பி, பீகார், மேற்குவங்கம், அசாம், மகாராஷ்ரா, கர்நாடகா, டெல்லி ஆகிய 7 மாநிலங்களில் குடியரசு தினத்தை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத் துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து இந்த 7 மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உஷார்படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
தீவிரவாதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் நடமாடும் பகுதியில் மேற்கொள்ளப்பட்டும் ரகசிய தொலைபேசி உரையாடல்களின் மூலம் இந்த தகவல்கள் கிடைத்திருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய நகரங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை உறுதி செய்யவேண்டும் என மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையடுத்து உடனடியாக டெல்லியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புறநகர் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முக்கிய அலுவலகங்கள், வணிக வளாகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்கள் பலத்த பாதுகாப்பு எல்லைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications