வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இந்திரா காந்தி விருது

Subscribe to Oneindia Tamil

Hasina
டெல்லி: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்திரா காந்தி அமைதி விருது வழங்கப்பட்டது. விருதை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வழங்கினார்.

ராஷ்டிரபதி பவனில் நடந்த நிகழ்ச்சியில் ஹசீனாவுக்கு இந்திரா காந்தி அமைதி விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பிரதீபா பாட்டீல் பேசுகையில், கடந்த ஆண்டு ஐ.நா. சபையில் ஹசீனா பேசுகையில், உலகளாவிய சவால்களில் உலக நாடுகளோடு தானும் இணைந்து செயல்படுவதை மிகச் சிறந்த முறையில் வெளிப்படுத்தியிருந்தார் ஷேக் ஹசீனா.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் மனதில் இடம் பெற்றிருந்தவர் ஷேக் ஹசீனா. இன்று அவரது பெயரால் உருவாக்கப்பட்டுள்ள விருதினை ஹசீனா பெறுவது மிகவும் பொருத்தமானது.

தெற்காசியாவின் மிக்ச சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவரான ஹசீனா இந்த விருதினைப் பெறுவது மிகச் சரியானது என்றார்.

பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் சமூக பொருளாதார வளர்ச்சிக்காகவும், வங்கதேச மக்களின் நலனுக்காகவும் ஓய்வின்றி பாடுபட்டு வருபவர் ஹசீனா.

பிராந்திய அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றுக்காக தொடர்ந்து உழைத்து வருகிறார். அவருடைய அரசியல் பாதை மென்மையானதாக இருந்திருக்கவில்லை. ஆனால் சுயநலமில்லாத தனது சேவையின் மூலம் வங்கதேச மக்களின் அன்பையும், நனமதிப்பையும் அவர் சம்பாதித்துள்ளார்.

வங்கதேசத்தை 2021ம் ஆண்டுக்குள் வறுமையற்ற, வளர்ச்சி பெற்ற நாடாக மாற்ற உறுதி பூண்டுள்ள ஹசீனாவின் திட்டம் பாராட்டுக்குரியது என்றார் சிங்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+