2013ல் வி்ண்வெளிக்கு மனிதனை அனுப்ப இந்தியா திட்டம்!

ரஷ்யா வடிவமைத்துத் தரும் புதிய 'சோயுஸ்' ரக விண்கலத்தின் மூலம் இரண்டு இந்திய விஞ்ஞானிகளை விண்வெளிக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் விடாலி டேவிடோ இதைத் தெரிவித்ததாக ரஷ்ய வானொலி இத்தகவலை வெளியிட்டது.
விண்வெளியில் பூவி வட்டப்பாதையில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விஞ்ஞானிகள் செல்ல வாய்ப்பில்லை என்றும் விடாலி டேவிடோ கூறியுள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்காக ரஷ்யா வடிவமைக்கும் இந்த சோயுஸ் ரக விண்கலம் இந்திய தேவைக்கு ஏற்ப பிரத்தியேகமாக வடிவமைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த விஷயத்தை இந்தியா இன்னும் வெளியில் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் ரஷ்ய ராக்கெட் மூலம் ரஷ்யர்களுடன் இணைந்து இந்தியரான ராகேஷ் சர்மா விண்ணுக்குச் சென்று வந்தார். ஆனால், இம்முறை இந்தியர்கள் மட்டுமே பயணிக்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications