வைரம் கடத்தியதாக சீனாவில் 21 இந்தியர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சீனாவில் வைரங்களை கடத்தியதாக 21 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் தெற்கே உள்ள ஷான்சென நகரில் 21 பேரையும் நகர சுங்க இலாகா கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் நிருபமா ராவ் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில்,
பெய்ஜிங்கில் வைரக் கடத்தல் தொடர்பாக இந்தியர்கள் கைது செய்யப்பட்டது குறித்து சீன அரசை தொடர்பு கொண்டு அங்குள்ள இந்திய தூதரகம் பேசியுள்ளது.
இப்பிரச்சனை குறித்த உண்மை நிலவர அறிக்கையை அளிக்குமாறு தூதரகத்திடம் கேட்டுள்ளோம். ஷென்சென் பகுதிக்கு உட்பட்ட காங்சுவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம், டெல்லியில் உள்ள சீன தூதரும் தொடர்புகொண்டு பேசியுள்ளார் எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications