டிஜிபியாக லத்திகா சரண் பதவியேற்றார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தின் புதிய டிஜிபியாக லத்திகா சரண் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்ர்.
தமிழக டிஜிபியாக இருந்து வந்த கே.பி.எஸ்.ஜெயின் நீண்ட விடுமுறையில் செல்வதால், அப்பொறுப்புக்கு லத்திகா சரண் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார். கே.பி.எஸ். ஜெயின் தனது பொறுப்புகளை இன்று மாலை லத்திகாவிடம் ஒப்படைக்கிறார்.
இதன்மூலம் தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமையை லத்திகா சரண் பெறுகிறார். மேலும் இந்தியாவின் 2வது பெண் டிஜிபியும் லத்திகாவே.
ஏற்கனவே நாட்டின் முதல் பெண் கமிஷனராக, சென்னை மாநகர கமிஷனர் பதவியை அலங்கரித்தவர் லத்திகா சரண் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லையில் நடுரோட்டில் எஸ்.ஐ. வெட்டிக் கொல்லப்பட்டதையடுத்து ஜெயின் விடுமுறையில் செல்வதும், லத்திகா டிஜிபியாக நியமிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications