ரேஷன் கார்டு-விண்ணப்பித்தால் எஸ்எம்எஸ் தகவல்
சென்னை: தமிழகத்தில் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள் செல்போன் நம்பர், மின்னஞ்சல் முகவரியை தெரிவித்தால் ரேஷன் கார்டு தயாரானதும் எஸ்.எம்.எஸ் மற்றும் இமெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டம் தொடர்பான பல்வேறு பணிகள் மின்னணு மயமாக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக விண்ணப்ப நிலவரங்களை எஸ்எம்எஸ் மற்றும் இடமெயில் மூலம் தெரிவிக்கும வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் ராஜாராமன் கூறுகையில், 'புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் போது, தவறாமல் செல்போன் எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை குறிப்பிட வேண்டும். புதிய ரேஷன் தயாரானதும் இதன் மூலம் தகவல் வரும்.
அடுத்த 10 நாட்கள் கழித்து சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர் அல்லது வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு வந்து புதிய அட்டையை பெற்றுக்கொள்ளலாம்' என்றார்.












Click it and Unblock the Notifications