மாணவி கடத்தி கற்பழிப்பு: தலைமறைவான ஆசிரியர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: டியூஷன் படிக்க வந்த மாணவியை கடத்தி கற்பழித்துவிட்டு தலைமறைவான ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

கடந்தவாரம் சென்னை எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவந்த பிளஸ்2 மாணவியை அப்பள்ளி ஆசிரியரே கடத்திச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இருதினங்களுக்கு முன் கடத்தல் ஆசிரியர் அமலன் மாணவியை ஒரு வக்கீலிடம் ஒப்படைத்துவிட்டு தலைமறைவானார். போலீசார் மாணவியை விசாரித்தபோது, ஆசிரியர் அமலன் தன்னை வேளாங்கண்ணி மற்றும் புதுவைக்கு கூட்டிச் சென்று விடுதியில் தங்கவைத்து கற்பழித்ததாக மாணவி கூறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஏராளமான பெற்றோர் அந்த பள்ளியில் இருந்து தங்கள் குழந்தைகளை நிறுத்திவிட்டனர். தவறான நடத்தை கொண்ட ஆசிரியரின் பொறுப்பில் மாணவர்களை ஒப்படைத்த நிர்வாகிகளுக்கு எதிராக போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தலைமறைவான ஆசிரியர் அமலனை போலீசார் தேடிவந்தனர். அமலன், முக்கிய பிரமுகர் ஒருவரின் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில் ஆசிரியர் அமலனை நேற்று இரவு மாதவரத்தில் வைத்து போலீசார் கைது செயதனர். விடிய விடிய அவரிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார் இன்று காலை சைதாப்பேட்டையில் உள்ள மாஜிஸ்திரேட்டு முருகானந்தம் வீட்டில் ஆஜர்படுத்தினர்.

வருகிற 27ம் தேதி வரை அமலனை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்திரவிட்டார். இதையடுத்து போலீசார் அமலனை புழல் சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+