தென்காசி பராசக்தி மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா
தென்காசி: குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் தமிழியிற்புலம் சார்பில் நன்னகரம் முப்புடாதி அம்மன் கோவில் முன்பு பொங்கல் ஒருமைபாட்டு விழா நடந்தது.
இந்த விழாவுக்கு மேலகரம் பேரூராட்சி தலைவர் குமார் தலைமை வகித்தார். துணை தலைவர் பாலசுப்பிரமணியன், ஆசிரியை விமலாதேவி, நாட்டாமை கண்ணன் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து ஓட்டப்பந்தயம், இசை இருக்கை போட்டிகள் நடந்தது. பராசக்தி மகளிர் கல்லூரியின் பொருளாதாரத் துறையின் சுற்றுசூழல் மன்றம் சார்பில் பொங்கல் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் கிருஷ்ணம்மாள் தலைமை வகித்தார். பேராசிரியை கயற்கண்ணி வரவேற்றார்.
பள்ளியில்...
தென்காசி சிதம்பர சுபா லூமினஸ் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தாளாளர் சாமி தலைமை வகித்தார். முதல்வர் ஜெயலட்சுமி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
சமத்துவப் பொங்கல்...
ஆலங்குளம் முத்தாரம்மன் கோயில் திடல் முன்பு நகர காங் கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. ராமசுப்பு எம்பி விழா தொடங்கி வைத்தார். நகர தலைவர் தங்கசெல்வம், மாவட்ட கவுன்சிலர் வைகுண்ட ராஜா முன்னிலை வகித்தனர்.
இளைஞர் காங் தொகுதி பொறுப்பாளர் செல்லபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications