உலோகத்தொழில்துறை படிப்புக்கு பிரகாசமான எதிர்காலம்- அமைச்சர் தகவல்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் மாநில அளவிலான கலைப்போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.
விழாவில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் பரிசுகளை வழங்கி இ.எம். சுதர்சன நாச்சியப்பன் எம்.பி பேசுகையில்,
மத்திய அரசு ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சிக்காக ரூ.20 ஆயிரம் கோடி முதல் ரூ.25 ஆயிரம் கோடி வரை செலவு செய்து வருகிறது. பலருக்கும் கல்வி கிடைக்கும் வகையில் 6 ஆயிரம் புதிய மத்திய அரசு பள்ளிகள் துவக்கப்பட உள்ளன. இது வரும் ஆண்டு முதல் படிப்படியாகத் துவக்கப்படும்.
வரும் 2020ம் ஆண்டில் 2.20 லட்சம் உலோகத்துறை வல்லுநர்கள் தேவைப்படுகிறார்கள். அதற்காக நாடு முழுவதும் ஐ.டி.ஐ. நிறுவனங்களை மத்திய அரசு துவக்க உள்ளது.
வரும் கல்வியாண்டு முதல் உலோகக் கல்வி பயிலும் தொழில் கல்வி மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித் தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்க உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications