ஸ்ரீபெரும்புதூர்-கால்வாயில் ஆட்டோ கவிழ்ந்து 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பாக்கம் அருகே தாறுமாறாக ஓடிய ஆட்டோ கிருஷ்ணா கால்வாயில் விழுந்ததில் அதில் பயணம் செய்த 6 பேர் கொல்லப்பட்டனர்.
பட்டு மாங்காடு பகுதியைச் சேர்ந்த சிலர் ஷேர் ஆட்டோவலில் பயணித்தனர். இந்த ஆட்டோ, வெங்கல் என்ற இடத்தில் போய்க் கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி தாறுமாறாக ஓடி அருகில் இருந்த கிருஷ்ணா கால்வாயில் விழுந்தது.
இதில், 2 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications