ஜோதிபாசுவின் உடல் நிலை மோசம்-சிறுநீரகம் செயலிழப்பு
கொல்கத்தா: பழம்பெறும் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவின் உடல் உறுப்புகள் செயலிழக்க தொடங்கியுள்ளன. அவருடைய சிறுநீரகம் செயிலிழந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
நிமோனியா காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ஜோதிபாசு. அவருடைய உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது.
இந்த நிலையில் அவருடைய உடல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவருடைய சிறுநீரகம் செயலிழந்துள்ளதாக டாக்டர் ஏ.கே.மைத்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஜோதிபாசுவின் உடல் நிலை மோசமடைந்து வருகிறது. நிலையற்றதாக உள்ளது. அவருடைய சிறுநீரகம் தற்போது செயலிழந்துள்ளது. இதையடுத்து நேற்று இரவு அவருக்கு 2 மணி நேரம் டயாலிசிஸ் செய்யப்பட்டது.
அவருடைய இதயம் ரத்தத்தை சரிவர பம்ப் செய்ய முடியாத நிலையில் உள்ளது. இதை சரி செய்ய சில புதிய மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன என்றார்.
பாசு சிகிச்சை பெற்று வரும் ஏ.எம்.ஆர்.ஐ. மருத்துவமனை இயக்குநர் கூறுகையில், பாசுவின் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. இது கவலை அளிப்பதாக உள்ளதாக இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications