காணாமல் போன பிளஸ்டூ மாணவி பிணமாக மீட்பு!
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே நிர்வாண நிலையில் பிணமாகக் கிடந்த இளம்பெண் சென்னையைச் சேர்ந்த பிளஸ்டூ மாணவி என தெரியவந்தது. கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலூர் குப்பம் அருகே கிருஷ்ணா கால்வாய் ஓரம் முள் புதரில் கடந்த 6ம் தேதி ஒரு இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.
அப்பெண் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கொரட்டூரில் ராஜசேகர் என்பவர் தனது மகள் பவானியை காணவில்லை என கொரட்டூர் போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் பிளஸ்டூ படிக்கும் தனது மகள் பவானி (17), கடந்த 5ம் தேதி மாலை டியூஷனுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என புகார் கூறியிருந்தார்.
ராஜசேகரை தொடர்பு கொண்டு ஸ்ரீபெரும்புதூர் போலீசார் முள்புதரில் கிடந்த பெண்ணின் சடலத்தை காண்பித்தனர். அது பவானி தான் என உறுதி செய்த தந்தை ராஜசேகர் கதறி அழுதார்.
இதையடுத்து பவானி கொல்லப்பட்டதற்கு காதல் விவகாரம் காரணமா அல்லது யாரேனும் கடத்தி கற்பழித்தார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications