அண்ணா சாலையில் நள்ளிரவில் வெடிகுண்டு பீதி
சென்னை: சென்னை ஆண்ணா சாலையில் உள்ள முக்கிய வணிக வளாகமான 'ஸ்பென்சர் பிளாசா'வில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்து நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய சோதனை நடத்திய பின் அது வெறும் புரளி என தெரியவந்தது.
இச்சம்பவத்தால் ஸ்பென்சர் பிளாசா பகுதியில் நள்ளிரவு முதல் பரபரப்பாக காணப்பட்டது. பொங்கல் பண்டிகை நாளில் இதுபோன்ற வெடிகுண்டு அச்சுறுத்தல் வந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
ஸ்பென்சர் பிளாசா கட்டிடத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலீஸ் நிலையத்துக்கு பொய் தகவல் கொடுத்து பீதி ஏற்படுத்திய நபரை சுற்றிவளைக்க போலீசார் வியூகம் வகுத்துவருகின்றனர்.
அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை பதிவு செய்துள்ள போலீசார் விரைவில் அந்த மர்ம ஆசாமியை பிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினர்.












Click it and Unblock the Notifications