நான் நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை-நீதிபதி தினகரன்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: நான் நில ஆக்கிரமிப்பு எதிலும் ஈடுபடவில்லை என்று கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் மீண்டும் மறுத்துள்ளார்.
இதுகுறித்து பெங்களூரைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், நான் அரசு நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை. அல்லது தனியார் நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை.
நான் தற்போது வைத்துள்ள சொத்துக்கள் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு எனது குடும்பத்தாரால் வாங்கப்பட்டவை. இப்போது அவற்றின் சொத்து மதிப்பு பல கோடிகளாக இருக்கலாம். ஆனால் வாங்கப்பட்டபோது அவற்றின் மதிப்பு மிகவும் குறைவானதாகவே இருந்தது. அதுகுறித்து என் மீது அபாண்டமாக குற்றம் சாட்டுவோர் கவனத்தில் கொண்டார்களா என்றார் தினகரன்.












Click it and Unblock the Notifications