பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு அச்சம்
டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டும் என்ற மத்திய பெட்ரோலியத்துறையின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு தயக்கம் காட்டி வருவதால் இப்போதைக்கு விலை உயர்வு இருக்காது என்று தெரிகிறது.
பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா நேற்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து, பொதுத்துறை எண்ணை நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட நிவாரணம் கோரினார். ஆனால் இந்தக் கூட்டத்தின்போது எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை.
நஷ்டத்தை ஈடுகட்ட பெட்ரோலியத்துறை ரூ. 31,700 கோடி கேட்கிறது. ஆனால் அதில் பாதிக்கும் கீழான தொகையைத் தரவே மத்திய நிதியமைச்சகம் முன்வந்துள்ளது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முரளி தியோரா, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.
நஷ்டத்தை ஈடுகட்ட பெட்ரோல், டீசல், காஸ் மற்றும் மண்ணெண்ணை ஆகியவற்றின் விலையை உயர்த்தவும் மத்திய அரசு விரும்பவில்லையாம்.
நேற்றைய கூட்டத்தில் 3 எண்ணை நிறுவனங்களுக்கு ரூ. 12,000 கோடி ரொக்க மானியம் தர மட்டுமே மத்திய அரசு ஒப்புக் கொண்டதாம்.
முன்நதாக கச்சா எண்ணை விலை உயர்வால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் விலையை படிப்படியாகவும் உயர்த்த வேண்டும் என்று பெட்ரோலிய அமைச்சகம் யோசனை தெரிவித்திருந்தது.
இதையடுத்து நேற்று பிரதமர் இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பிரணாப், தியோரா தவிர,
பிரதமர் மன்மோகன் சிங், பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா, திட்டக் கமிஷன் துணைத் தலைவர் எம்.எஸ். அலுவாலியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications