வரிச் சலுகைகள் தொடர வேண்டும்-நிபுணர்கள்

சர்வதேச பொருளாதார தேக்க நிலை காரணமாக தொழில்துறையை சரிவிலிருந்து காக்க மத்திய அரசு பல்வேறு வரிச் சலுகைகளை அறிவித்தது. இதனால் அரசின் வருமானம் பெருமளவு குறைந்தது.
மேலும் பொருளாதார தேக்க நிலையைச் சமாளிப்பதற்காக பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நிறுத்திவிட்டு ரூ. 1.86 லட்சம் கோடி சலுகையை மத்திய அரசு அளித்தது. இதனால் அரசின் நிதிப் பற்றாக்குறை 6.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந் நிலையில் 2010-11ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 26ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. அதில், வரிச் சலுகைகள் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு பொருளாதார நிபுணர்கள் எதிர்ப்புத் தெரிவித்தள்ளனர்.
பட்ஜெட் குறித்து மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பல்வேறு தரப்பினரையும் சந்தித்து அவர்களது கருத்துகள், ஆலோசனைகளைக் கேட்டு வருகிறார்.
நேற்று பொருளாதார நிபுணர்களுடன் முகர்ஜி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய நிபுணர்கள் முழு பொருளாதார மீட்சி ஏற்படும் வரை வரிச் சலுகைகள் தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
தற்போதைய சூழ்நிலையில் வரிச் சலுகைகளை மத்திய அரசு திரும்பப் பெறக் கூடாது. பொருளாதாரம் மீட்சியடையும் வரை வரிச் சலுகைகள் தொடர வேண்டும்.
பொருளாதார தேக்க நிலை பாதிப்பிலிருந்து தொழில்துறை முற்றிலுமாக மீட்சியடையாத நிலையில் வரிச் சலுகைகளை அவசர கதியில் மத்திய அரசு திரும்பப் பெறக்கூடாது என்று நிபுணர்கள் முகர்ஜியிடம் வலியுறுத்தினர்.
அதேசமயம் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications