ஜஸ்வந்த் சிங்கிற்கு 'அமைதி தூதர்' பட்டம்
Subscribe to Oneindia Tamil
லண்டன்: இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், பா.ஜ.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டவருமான ஜஸ்வந்த் சிங்கிற்கு தெற்காசியாவின் அமைதித் தூதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
லண்டனைச் சேர்ந்த 'பீஸ் இன்டர்நேஷனல்' அமைப்பு இந்த விருதை ஜஸ்வந்த் சிங்கிற்கு வழங்கியுள்ளது.
லண்டன் ஹில்டன் ஹோட்டலில் நடந்த விழாவில் அமைப்பின் தலைவர் ஜாவேத் ராஜா இவ்விருதை வழங்கினார்.
விருதை பெற்றுக்கொண்ட ஜஸ்வந்த்சிங், 'தெற்காசியாவில் நான் ஒரு சாதாரண குடிமகன். என்றாலும், எனது மிச்சமுள்ள வாழ்க்கையில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு இடையிலான அமைதிக்காக பாடுபடுவேன்' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications