பட்டுக் குகை முருகன் கோவிலுக்கு மிரட்டல்-மலேசியர் கைது
கோலாலம்பூர்: உலகப் புகழ் பெற்ற பட்டுக் குகை முருகன் கோவிலை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக ஃபேஸ்புக் மூலம் மிரட்டல் விடுத்த மலேசியரை அந்த நாட்டு போலீஸார் கைது செய்தனர்.
அந்த நபரின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. 25 வயதான அவர், ஃபேஸ்புக் மூலம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். அதில், தனக்குப் பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் பட்டுக் குகை முருகன் கோவிலை குண்டு வைத்துத் தகர்ப்பேன் என்று மிரட்டியிருந்தார்.
இதுகுறித்து போலீஸில் மலேசிய இந்திய காங்கிரஸ் புகார் கொடுத்தது. அதன் பேரில் போலீஸார் செயல்பட்டு அந்த நபரைக் கைது செய்தனர். அவர் ஒரு மாணவர். கோலாலம்பூரில் உள்ள சில சர்ச்சுகள் மீது தாக்குதல் நடத்த நாட்டு வெடிகுண்டுகளைத் தயார் செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அல்லா என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது தொடர்பாக மலேசிய கோர்ட் பிறப்பித்த தீர்ப்பைக் கண்டித்து மலேசியாவில் சர்ச்சுகள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது சமீபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் இந்த மாணவர் முருகன் கோவிலுக்கு மிரட்டல் விடுத்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் இவர் தீவிரவாதி அல்ல என்றும், தனது படிப்புக் கட்டணத்தை யாராவது செலுத்தினால் இவ்வாறு செய்யத் தான் தயாராக இருப்பதாக அவர் கூறியிருந்தார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications