18ம் படியை அகலப்படுத்த அடுத்த மாதம் தேவபிரசன்னம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சபரி்மலையில் பக்தர்கள் நெரிசலை கட்டுபடுத்த 18ம் படியின் அகலத்தை கூட்ட வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து இது தொடர்பாக அடுத்த மாதம் தேவ பிரசன்னம் பார்க்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மாத பூஜைகளின் போதும் அதிக பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் 10 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் நின்று ஐயப்பனை தரிசிக்க வேண்டி உள்ளது. சன்னிதானத்தில் நெரிசலை தவிர்க்க 18ம் படியின் அகலத்தை அதிகரிக்க வேண்டும் என ஏடிஜிபி சந்திரசேகரன் தேவசம்போர்டுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர், 18ம் படியில் தற்போது 1 நிமிடத்தில் 90 முதல் 110 பேர் வரை மட்டுமே ஏற்றி விடப்படுகின்றனர். பல நேரங்களில் பக்தர்களின் வரிசை அதிகரிப்பதால் நெரிசல் ஏற்பட்டு காயம் அடைக்கின்றனர்.

18ம் படியின் அகலத்தை அதிகரித்தால் மட்டுமே குறைந்த நேரத்தில் கூடுதல் பக்தர்களை ஏற்றிவிட முடியும். இது தொடர்பாக உடனடியாக முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆகவே அடுத்த மாதம் தேவபிரச்சன்னம் பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+