பெரம்பலூர் அருகே கோர விபத்து- 5 அய்யப்ப பக்தர்கள் பலி
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே இன்று காலை நடந்த கோர சாலை விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த 5 அய்யப்ப பக்தர்கள் பலியானார்கள்.
ஆந்திராவைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் வேன் மூலம் சபரிமலைக்குச் சென்றனர். அங்கு மகர ஜோதி தரிசனத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலையில் அவர்களது வேன் பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையோரமாக ஒரு லாரி பழுதடைந்து நின்று கொண்டிருந்தது.
வேகமாக வந்த வேன் லாரி நிற்பதை அறியாமல், பின்னால் பலமாக மோதியது. இதில் வேனில் இருந்த யாத்கிரி, சங்கர், விட்டல், வெங்கட்நாராயணா ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
12 பேர் படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 12 வயது சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி இறந்தான்.
மற்ற 11 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications