தொடரும் ஆஸி. அடாவடி- இந்திய டாக்சி டிரைவருக்கு மிரட்டல்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இனவெறிச் சம்பவமாக, இந்திய டாக்சி டிரைவரை, அவருடைய டாக்சியில் பயணித்த இருவர் கத்தி முனையில் மிரட்டியுள்ளனர்.
ஆனால் இது இனவெறி சம்பவம் அல்ல என்று ஆஸ்திரேலிய போலீஸார் கூறியுள்ளனர்.
அந்த டாக்சி டிரைவர் ஒரு மாணவர் ஆவார். பகுதி நேரமாக டாக்சி டிரைவராக இருக்கிறார். பல்லார்ட் நகரில் உள்ள ஒரு கல்லூரியில் பிசினஸ் நிர்வாகப் படிப்பை படித்து வருகிறார்.
நேற்று பர்ட்வுட் அவென்யூ பகுதிக்கு இரண்டு பயணிகளை அழைத்து வருவதற்காக அவர் சென்றார். அப்போது அந்த இருவரும், கத்தி முனையில் அந்த இந்தியரை மிரட்டியுள்ளனர்.
கடந்த 2 நாட்களில் ஆஸ்திரேலியர்களால் மிரட்டப்பட்ட 3வது இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று பேருமே டாக்சி டிரைவர்கள் என்பதும் முக்கியமானது.
2 நாட்களுக்கு முன்பு இதே பல்லார்ட் நகரில் ஒரு இந்திய டாக்சி டிரைவரை நான்கு ஆஸ்திரேலியப் பயணிகள் தாக்கி காயப்படுத்தினர். அதேபோல இன்னொரு சம்பவத்தில் ஒரு ஆஸ்திரேலியர், இந்திய டாக்சி டிரைவரைக் கொலை செய்து விடுவதாக மிரட்டி தாக்கினார். அந்த நபரை கைது செய்த போலீஸார் சில மணி நேரத்தில் அவருக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications