சச்சின் டெண்டுல்கருடன் கருணாநிதியை ஒப்பிடும் மு.க.அழகிரி

திருச்செந்தூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் 46,866 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையொட்டி, கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஆத்தூர், ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று நடைபெற்றது.
இதில் அழகிரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நான் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து கொண்டே கட்சித் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் நன்மை செய்யலாம். தமிழக அரசியலுக்கு வருவது குறித்து எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும்.
பார்லிமெண்ட்டில் தமிழில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், விளையாட்டில் இருந்து ஓய்வுபெற போவதாக கூறி தொடர்ந்து விளையாடி வருகிறார்.
அதே போன்று தமிழக மக்களுக்காக தினம் தினம் பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து வரும் தமிழக முதல்வர் கருணாநிதியும் முதல்வர் பதவியில் இருந்து ஓய்வுபெற மாட்டார் என்றார் அழகிரி.












Click it and Unblock the Notifications